முன்னுரை
எந்திரன் படம் பார்த்த எஃபெக்டு, நானே மண்டய சொரிஞ்சு மூணு நாள் யோசிச்சு
ஒரு எந்திரன் பார்ட் 2 நரேஷன் ரெடி பண்ணி வச்சிருக்கேன். ஹி ஹி. நம்புங்க சார்.
இத என்னிக்காவது டைரக்டர் ஷங்கர் கிட்ட கதை சொல்லி படமாக்கிடலாம்னு இருக்கேன்.
நம்மலும் எத்தினி நாளைக்குதான் இந்த சாஃப்ட்வேர் ப்ரொஜெக்ட்டுகளையே கட்டிக்கிட்டு இருக்கறது ?
இன்னும் எத்தன மீட்டிங்க்ல தான் யெஸ் யெஸ் யெஸ் ணு கதை பாடறது ?
பாகம் 1 - மரண வாசலில் வசி
2030 - ல் ஒரு நல்ல மார்கழி நாளில் வசிகரன் தன் உயிர் உடலை விட்டு விலகும் தருவாயில் இருப்பதை உணர்வு பூர்வமாய் அறிகிறார்.
( அனேகமா ரஜினி சாகுற மாதிரி ஓப்பனிங்க் வச்சதுக்கே ரசிகர்கள் கிட்டேந்து நல்ல வரவேற்பு இருக்கும்னு நினைக்கிறேன். )
அப்போது குறுக்கும் நெடுக்குமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்,ரஜினி ஒரு யோக நிலையில் அமர்கிறார். (இந்த இடத்தில் ஓம், கீம்னு மந்திரம் லாம் போட்டு ரஜினி ஒரு சிறந்த யோகியா சித்தரிக்கிறோம். )
எட்டாவது நிலையில் தான் இருப்பதை உணர்ந்த அவர், உடனே போய் ஒரு ஆப்பிள் மாக் புக்கையும், ஒரு பென் ட்ரைவையும் கொண்டு வருகிறார்.
தான் இறந்த பின்னும் தன் அறிவும் திறமையும் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன் பட விரும்பும் அவர், தனது மொத்த அறிவையும் அந்த பென் ட்ரைவில் பதிவு செய்கிறார். பின்னர், அந்த ட்ரைவயும், ஒரு உயிலையும் தமிழ அரசுக்கு அனுப்பி வைக்கிறார்.
(எப்படி பதிவு செய்ய முடியும்னு லாஜிக் எல்லாம் கேட்க கூடாது. ஒரு எஃஸ்ரே மெசின்ல விட்டு தனது நடையை சிட்டிக்கு பழக்க வில்லையா ? அது மாதிரி தான் இதுவும் :) ).
அந்த உயிலின் சாரம்சம் என்னன்னா,என்றைக்காவது இந்த உலக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், முக்கியமா திரை உலகினருக்கும் எதாவது ஆபத்து வருமாயின், கண்காட்சியில் பிரித்து வைக்க பட்டிருக்கும் சிட்டியின் உடலை ஓன்று சேர்த்து, அந்த பென் ட்ரைவிலிருந்து தனது அறிவை அப்லோட் செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம், என வசி குறிப்பிட்டுள்ளார். ( இந்த இடத்துலா தான் பழைய அறிவாய் அறிவாய் நீ அறிவாய் என்கிற பாட்டின் பீ ஜீ எம் போடுறோம். )
பின்னர், மறுபடியும் யோக நிலையில் உட்காருகிறார். (மறுபடியும் மந்திரம் போடுறோம் ).
பாகம் ரெண்டு அடுத்த வாரம் தொடரும்..... (இதுக்கு நடுவிலே விளம்பரதாரர் தேடுறோம் )
No comments:
Post a Comment